Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்டாக் பாண்டியை வைத்து ஸ்டாலினை மடக்க திட்டமா?

Advertiesment
Police
, புதன், 23 செப்டம்பர் 2015 (09:00 IST)
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அட்டாக் பாண்டியை வைத்து ஸ்டாலினை மடக்க தமிழக காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டியை அவருடைய செல்போன் பேச்சு மூலம், மும்பையில் தமிழக காவல் துறை கைது செய்தது. இந்நிலையில், பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ஸ்டாலினை சந்தித்தது பற்றி தனது வாக்குமூலத்தில் தெரிவிப்பாரா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 
 
அட்டாக் பாண்டியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொட்டு கொலை வழக்கில் மு.க.ஸ்டாலின் பெயரையும் இழுத்து விட போலீஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏனெனில், இந்த கொலை நடப்பதற்கு முன்பு, அட்டாக் பாண்டி மு.க. அழகிரியிடமிருந்து விலகி ஸ்டாலின் அணிக்கு மாறியிருந்தார். அதுமட்டுமல்லாது பொட்டு சுரேஷ் கொலைச் சம்பவத்துக்கு முன்பு, சென்னை சென்று மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்தது பற்றி ஏற்கன்வே அட்டாக்கின் உறவினர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக, அட்டாக் பாண்டியிடம் வாக்குமூலம் வாங்கவும் தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளனர்.
 
வரும் 25 ஆம் தேதி நமக்கு நாமே திட்டம் எனும் பேரில் மு.க.ஸ்டாலின் மதுரையில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். இதற்கு கவுன்டர் கொடுக்கும் வகையில் அட்டாக் பாண்டி கைதை காட்டி ஸ்டாலினை செயல்பட விடாமல் தடுக்கவே தமிழக அரசு இந்த கைது சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil