Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை .. ஆக மொத்தம் 4 நாள் விடுமுறை!– தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (13:46 IST)
தமிழகத்தில் தீபாவளியை தொடர்ந்து அடுத்த நாளும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டுமே வேலை நாளாக உள்ள நிலையில் அதையும் இணைத்து விடுமுறை வழங்கினால் வெளியூர் பயணிப்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என பலர் அபிப்ராயப்பட்டனர்.

இந்நிலையில் தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 5ம் தேதி வழங்கப்படும் இந்த விடுமுறைக்கு ஈடாக நவம்பர் 20 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் வேலை நாள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments