Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக நடிகர்-நடிகைகள் போராட்டம் நடத்த முடிவு

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (08:26 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் நடிகர்-நடிகைகள் போராட்டம் நடத்துவார்கள் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
 உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மத்திய அரசு மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என  கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு.
 
அதேபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் நடிகர் நடிகையர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments