Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயிலர் படத்திற்கு காட்டும் ஆவலை, நமக்காக ஜெயிலுக்குப் போனவர்கள் பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும்' தமிழிசை சவுந்தரராஜன்

Advertiesment
ஜெயிலர் படத்திற்கு காட்டும் ஆவலை, நமக்காக ஜெயிலுக்குப் போனவர்கள் பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும்'  தமிழிசை சவுந்தரராஜன்
, செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:55 IST)
ஜெயிலர் படத்தில் காட்டும் ஆவலை நமக்காக ஜெயிலுக்கு போன தேச தலைவர்களை படிப்பதிலும் காட்ட வேண்டும் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
புதுவை தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இன்று அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது ஜெயிலர் படத்தை பார்ப்பதற்கு காட்டும் ஆவலை நம் சுதந்திரத்திற்காக பாடுபட்டு ஜெயிலுக்கு போனவர்களை பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும் என்றும், பல தியாகிகளின் சுயசதைகளை படிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் நமக்கு நல்ல கருத்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மதன்லால் திங்ரா என்பவர் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று ஆங்கிலேயர் அதிகாரியை சுட்டுக் கொன்று சிறை பிடிக்கப்பட்டார். என் நாட்டு மக்களை கொன்றவர்களை அவர்கள் மண்ணிலே சென்று கொல்ல வேண்டும்  என்ற சுதந்திரப் போராட்ட வீரர் மதன்லால் திங்ரா இங்கிலாந்து சென்றார். இவர்களைப் போன்ற தலைவர்களை படிக்க வேண்டும் என்று தமிழிசை அறிவுறுத்தினார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளெஸ்டர் அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் - சத்திரப்பட்டி அணி முதலிடம்!