காரிலிருந்து கீழே விழுந்த தமிழிசை: பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (08:17 IST)
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூத்துகுடி விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறும்போது தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துகுடியில் மாணவி ஷோபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை நேற்று மீண்டும் தூத்துகுடி வந்தார். விமான நிலையத்தில் இருந்து காருக்கு செல்லும் வழியில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் காரி ஏற முயன்ற தமிழிசை எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து தொண்டர்கள் கீழே விழுந்த தமிழிசையை கைத்தாங்கலாக தூக்கினர். அதன்பின் அவர் காரில் ஏறி சென்றார். இந்த சம்பவத்தால் தூத்துகுடி விமான நிலையம் அருகே சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் இருந்து கீழே விழுந்த தமிழிசைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். செய்தியாளர்கள் தொடர்ந்து விரட்டி விரட்டி கேள்வி கேட்டதால் அவசர அவசரமாக காரில் ஏறியதால்தான் தமிழிசை கீழே விழுந்தார் என்றும் நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments