ஜோசியர் பேச்சை நம்பி பிறந்த குழந்தையை ஏரியில் வீசிய தந்தை கைது!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (07:45 IST)
இன்றைய கம்ப்யூட்டர் உலகிலும் இன்னும் ஒருசிலர் மூட நம்பிக்கையால் பெற்ற குழந்தையையே கொலை செய்யும் உளவுக்கு முட்டாள்களாக உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்புர் என்ற பகுதியில் நேற்று ஏரியில் இருந்து பச்சிளங்குழந்தை ஒன்றை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் அந்த குழந்தையின் தந்தை உள்பட மூவரை கைது செய்துள்ளனர். பிறந்த குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அந்த குழந்தை ராசியில்லாத குழந்தை என்றூம் ஜோசியர் கூறியதை மூடத்தனமாக நம்பிய அந்த குழந்தையின் தந்தையே குழந்தையை ஏரியில் தூக்கி எரிந்ததாக தெரிகிறது

இதனையடுத்து குழந்தையின் தந்தை, ஜோசியர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவர் என மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments