Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்த திமுக: மீண்டும் மாறுகிறதா தமிழ் புத்தாண்டு?

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:33 IST)
பொங்கல் பரிசு பையில் ’இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
பொங்கல் பண்டிகையின் போது நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பொருட்களை வைத்து கொடுக்கப்படும் துணிப் பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 
 
இதனால் மீண்டும் மாறுகிறதா தமிழ் புத்தாண்டு தேதி எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை மாதம் 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். 
 
ஆனால் இப்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாலும் பொருட்களை வைத்து கொடுக்கப்படும் துணிப் பையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும் தமிழ் புத்தாண்டு தேதி மாறுகிறதா என சந்தேகம் கிளம்பியுள்ளது. இது குறித்து அரசு இன்னும் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 
 
ஆனால், 2022 ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளில் சித்திரை மாதம் 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments