Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானை எங்கள் தடுப்பூசி தடுக்கும்! – ரஷ்யா நம்பிக்கை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:28 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் குறித்த பீதி எழுந்துள்ள நிலையில் தங்கள் தடுப்பூசி ஒமிக்ரானை தடுக்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

இந்த புதிய கொரோனா முந்தைய தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத அளவு வீரியமிக்கதாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா தங்களது தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் ஆகியவை ஒமிக்ரானை எதிர்க்கும் தன்மை கொண்டதாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து முறையான பரிசோதனை முடிவுகள் எதுவும் இல்லாத பட்சத்திலும் தங்களது ஸ்புட்னிக் தடுப்பூசி கொரோனாவின் எந்த மாறுதலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

காலம் மாறும்.. அப்போ உங்களுக்கு தண்டனை நிச்சயம்! - தேர்தல் அதிகாரிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

டிரம்ப் வரிவிதிப்பை நாங்கள் சமாளித்து கொள்வோம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments