Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

Advertiesment
3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (14:14 IST)
போலி பத்திரிகையாளர்களை களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும்   உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என  நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் கொண்ட அமர்வு கூறியதோடு அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்துடன் இலவச வீட்டுமனை பட்டா, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகளை இந்த அமைப்பு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் எங்கு எப்போது வாழ்ந்தது?'