Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. ஒரு வாரம் வெளுத்து கட்டும் என தகவல்..!

Siva
ஞாயிறு, 9 ஜூன் 2024 (12:02 IST)
தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
தென்மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
 
மேலும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் இன்று முதல் மிக மிக அதிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையில், தற்போது கன மழை பெய்து வருவதால் முழுமையாக தண்ணீர் கஷ்டம் நீங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments