தமிழகத்தில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்து சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை உள்ளது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மழை பெய்யும் மாவட்டங்கள் பின் வருமாறு:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்