Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் மனோ தங்கராஜ் டுவீட்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:39 IST)
பெரம்பலூரில் அமைந்துள்ள கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ்  உலக அளவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடுஎனத்தெரிவித்துள்ளார்,

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், அவரது அமைச்சரவை அடிக்கடை திராவிட மாடல் என்று கூறி வருகின்றனர்.

இதற்கு,  பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இதற்கு இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார்,

இன்று, பெரம்பலூரில் அமைந்துள்ள சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர்,  ‘’உயர்கல்விப் பெறும் மாணவர்களின் விகிதத்தில் 51.4% என்ற விகிதத்தில் உலக அளவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. இந்தியாவின் மொத்த சராசரி 32% ஆகவும், உலக அளவில் சராசரி 36.7% இருக்கும் நிலையில் திராவிட மாடல் ஆட்சி என்ன என்று கேட்பவர்களுக்கு இதுவே பதிலாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச் ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு.. சொந்த ஜாமீனில் விடுவிப்பு..!

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு! பயணங்களை தவிர்க்க வேண்டுகோள்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்.. டிசம்பர் 13ஆம் தேதி மகாதீபம்..!

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments