தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது: தமிழக அரசு அதிகாரிகள்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:59 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கர்நாடகா டெல்லி ஆந்திரா தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசிடம் விரைவில் ஆக்சிஜனை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை தமிழக அரசின் ஆலோசனையை கேட்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளதால் தமிழக அரசு தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது.
 
தமிழகத்தின் தேவைக்கே ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் தமிழக அரசை ஆலோசிக்காமல் அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்புவதா? என தமிழக அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்புவதால் எதிர்காலத்தில் தமிழகத்துக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படாது என்று தமிழக அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments