Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்க மங்கை கோமதிக்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு

Advertiesment
Tamil Nadu
, வியாழன், 2 மே 2019 (13:24 IST)
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று ஒரே நாளில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், தான் பிறந்த கிராமத்திற்கும் பெருமை தேடி தந்தவர் கோல்டன் கேர்ள் கோமதி. இவருக்கு ஏராளமான நிதியுதவியும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. சமீபத்தில் அதிமுக சார்பில் கோமதிக்கு ரூ. 15 லட்சம் பரிசுத்தொகை அளித்தனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே திமுக ரூ.10 லட்சமும், காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சமும், ரோபோ சங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கோமதிக்கு நிதியுதவி செய்தனர்.  மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கோமதிக்கு ரூ.5லட்சம்  நிதியுதவி செய்துள்ளார். அவர் இன்னும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று பலர்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
சமீபத்தில் தங்கமங்கை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனது  கிரீன்வேஸ் இல்லத்தில்  வழங்கினார். அப்போது துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 10 லட்சத்திற்கான பரிசுத்தொகையை அறிவித்தார். அதேபோல் தடகள போட்டியில் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது தமிழக அரசு. 
 
மேலும்  இருவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவி கலரும் தாமரை மலரும் மிஸ்ஸிங்: அதிமுகவை வாரிவிட்ட டிடிவி!