தமிழக சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன்.
வாக்களித்த பின்னர் செய்தியளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன் கொட்டும் மழையிலும் மக்கள் காத்திருந்து வாக்களித்ததற்கு நன்றி கூறினார். மேலும் மக்கள் சின்னங்களை பார்த்து வாக்களிக்காமல் நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களித்து தேர்வு செய்ய வலியுறுத்தினார்.
ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதாக கேள்விப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. மக்கள் விலை போகக்கூடாது. இங்கு ஜனநாயகம் நடக்கிறதா? இல்லை பணநாயகம் நடக்கிறதா? என தெரியவில்லை என பேசினார் டி.ராஜேந்திரன்.