Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேராம்' மீண்டும் ரிலீசா? அதெல்லாம் நடக்காது என எஸ்வி சேகர் கிண்டல்!

Webdunia
வியாழன், 16 மே 2019 (21:38 IST)
இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் பற்ற வைத்த நெருப்பு நன்றாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இந்தியா முழுவதும் கமல் பேச்சாகவே உள்ளதால் அவர் ஒரே நாளில் தேசிய தலைவராகிவிட்டார். அதுமட்டுமின்றி அவரது ஓடாத படங்களின் பட்டியலில் உள்ள 'ஹேராம்' படத்திற்கு திடீரென தற்போது மவுசு கிடைத்துள்ளது.
 
இதற்கேற்றால்போல் இந்து, முஸ்லீம் குறித்தும் தீவிரவாதம் குறித்தும் தான் பேசியது புரியவில்லை என்றால் 'ஹேராம்' படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கமல் கூறியுள்ளார். இதனையடுத்து 'ஹேராம்' படத்தின் டிவிடிக்கள் அதிகம் விற்பனையாகியுள்ளதாகவும், யூடியூபில் இந்த படத்தை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இதுகுறித்து கிண்டலுடன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், 'அப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா. நடக்காது. எப்ப ரிலீஸ் ஆனாலும் ஓடாது என்று கூறியுள்ளார். எஸ்வி சேகரின் இந்த டுவீட்டுக்கு பெரும்பாலான கண்டனங்கள் பதிவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 லட்சம் செலவில் Tower Clock.. கடிகாரம் ஓடல.. சரிசெய்ய வழியும் இல்ல! - கலாய் வாங்கிய பீகார் ஸ்மார்ட்சிட்டி!

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments