Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021ல் அதிசயம் நிகழ்த்துபவர் ரஜினி இல்லை, இவர்தான்: எஸ்வி சேகரின் டுவிட்டால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (09:15 IST)
வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிசயம் அற்புதம் நிகழும் என சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியால் இந்த அதிசயம் அற்புதம் நிகழுமா? என்று 2021 ஆம் ஆண்டு வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்
 
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் அதிசயம் நடத்துபவர் கருணாநிதியின் மகன் முக அழகிரி தான் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். முக அழகிரியின் திருமண நாளை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் கூறியதாவது: ’முகஅழகிரி  நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல நண்பருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 2021ல் அதிசயம் நிகழ்த்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க என் வாழ்த்துக்கள் நண்பரே’ என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக முக அழகிரி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கூட தனக்கு வணக்கம் சொல்லிவிட்டு போவதாகவும் ஆனால் திமுகவினர் தன்னிடம் பேசுவதே இல்லை என்று ஆதங்கப்பட்டார். நானும் கருணாநிதியின் மகன் தான் என்றும் ஆனால் என்னவோ தெரியவில்லை என்னை பார்த்தால் யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள் என்றும் கூறியதோடு எனக்கும் காலம் வரும், நான் நினைத்ததை சாதிப்பேன் நானும் கலைஞரின் பிள்ளை தான், அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்