Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா அதிரடி

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (11:33 IST)
பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம்  முன்பும் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். 
 
எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசினார்.
 
பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதுக்கு பயந்து எஸ்.வி சேகர் தலைமறைவாகியுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாக பேசிய எஸ்.வி சேகர் அனைத்து பத்திக்கையாளர்களின் முன்பு சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments