Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமர் எஸ்.ஐ கொலை வழக்கு – கொலையாளிகள் இவர்கள்தான் !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (15:17 IST)
கன்னியாகுமரியில் நேற்றிரவு எஸ்.ஐ. ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதை அடுத்து சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களைப் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

நேற்றிரவு களியக்காவிளை சோதனைச் சாவடியில் நேற்றிரவு பணியில் இருந்த வில்சன் என்ற எஸ்.ஐ –யை ஸ்கார்பியோ காரில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த வில்சனை சக காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்  சிகிச்சை பலனிள்ளாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பதற்றம் அதிகமாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

விசாரணையின் அடுத்த கட்டமாக கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த தவுபீக், ஷமீம் என்பவர்கள்தான் இந்த கொலையை செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளது காவல்துறை. கொலையாளிகள் கேரளாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் கேரளா போலீஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments