Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரானின் ஏவுகணை பலம் என்ன? என்ன மாதிரியான ஏவுகணைகள் உள்ளன?

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (15:15 IST)
இஸ்ரேல், சௌதி அரேபியா போன்ற இரானின் எதிரி நாடுகளுடன் ஒப்பிடும்போது விமானப் படையின் பலம் குறைவாக இருந்தாலும், இரானின் ஏவுகணை பலம் அதன் ராணுவ பலத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.
 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிக அளவிலான ஏவுகணைகளை இரான் வைத்திருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவற்றில் பெரும்பாலானவை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் மற்றும் நடுத்தர தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் அதிகமாக உள்ளன. ஏவுகணைகள் இன்னும் வேகமாக பயணிப்பதற்காக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் நோக்கில், தங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இரான் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 
இருந்தபோதிலும், 2015ல் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தை இரான் நிறுத்தியுள்ளது என்று ராயல் யுனைடெட் சர்வீஸஸ் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் உறுதியானதாக இருக்குமா என்ற சந்தேகமான சூழ்நிலையில், ஏவுகணை தயாரிப்பை இரான் மீண்டும் தொடங்கி இருக்கலாம் என்றும் அது கூறுகிறது.
 
காசெம் சுலேமானி கொலைக்கு பிறகு 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப் போவதில்லை என இரான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments