Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் - தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

Webdunia
புதன், 16 மே 2018 (12:27 IST)
காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 14ந்தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 
 
இந்நிலையில் காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசின் சார்பில் 2 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
 
# காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.
# காவிரி மேலாண்மை வாரியம் தலைமயகத்தை கர்நாடகத்தில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும்.
 
என இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்வழக்கு தற்பொழுது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முதல் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தற்பொழுது நிராகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments