சமீபத்தில் கன்னட திரைப்பட விழாவில் பேசிய விஷால், தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை கேட்பது தங்கள் உரிமை என்றும் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்றும் ஆவேசமாக பேசினார்.
விஷால் இவ்வாறு பேசிய மூன்றாவது தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடக அரசு. தன்னுடைய கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட்டதற்கு நன்றி என்று விஷால் நீர்ப்பாச அமைச்சருக்கு கடிதம் எழுதினார்
இந்த நிலையில் கர்நாடக அணையில் தண்ணீர் அதிகமாக இருந்ததற்காகவோ, யாருடைய வேண்டுதலுக்காகவோ தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதற்காகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிய போது நம்மிடம் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீரை திறக்கவில்லை. தற்போதும் போதிய அளவில் தண்ணீர் இல்லை என்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றம் செல்லும் என்பதற்காகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
என்னால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது என்று தம்பட்டம் அடித்த விஷாலை முதல்வர் சித்தராமையா அசிங்கப்படுத்திவிட்டதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.