அடுத்த 3 நாட்களுக்கு வெயில்.. அப்புறம் சில்லென்ற மழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Prasanth K
திங்கள், 30 ஜூன் 2025 (15:30 IST)

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும் சில பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிப்பதால் ஓரிரு பகுதிகளில் அசௌகர்யம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழைப்பொழிவிற்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments