Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருங்குகிறது கோடை காலம்..! களைக்கட்டும் தர்ப்பூசணி விற்பனை.!!

Senthil Velan
செவ்வாய், 30 ஜனவரி 2024 (16:49 IST)
கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது.
 
கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை உட்கொள்ள துவங்கிவிட்டனர். 
 
கம்பங்கூழ், நீர்மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அதிகளவு அருந்த துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் வெயில் காலத்தில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி விற்பனை கோவையில் துவங்கி உள்ளது. இந்த பழத்தில் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்வர்.
 
கோவையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.  பலரும் தர்பூசணி பழங்களையும், தர்பூசணி பழச்சாற்றையும் விரும்பி உட்கொள்கின்றனர்.

ALSO READ: நிதீஷ்குமாரை போல ரங்கசாமியும் எட்டப்பன்தான்..! காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் சாடல்..!
இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதால் தர்பூசணி இறக்குமதியை அதிகரிக்க வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments