Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் பற்றி நான் கேட்ட போது ஜெ. பொங்கி எழுந்தார் - சுவாமி பகீர் பேட்டி

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (14:21 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு மகள் இருக்கிறார் என நெடுங்காலமாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால், அது உண்மைதான் என இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை.


 

சமீபத்தில் கூட பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அடுக்கடுக்காக அவர் கூறியுள்ள ஆதாரங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி “ 1992ம் ஆண்டு நான் மத்திய அமைச்சராக இருந்த போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது ஜெ.வின் வீட்டில் நடந்த ஒரு இரவு நேர விருந்தில் நான் கலந்துகொண்டேன்.
 
அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்த நான், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் என பேச்சு அடிபடுகிறதே? எனக் கேட்டன்.  அதற்கு ஜெயலலிதா கோபமடைந்தார். அதில் உண்மையில்லை. இது கருணாநிதியின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம் என கொந்தளிப்புடன் கூறினார்.
 
தற்போது ஒரு பெண் நீதிமன்றம் சென்றுள்ளார். அவர் ஜெ.வின் மகளா என்பதை நீதிமன்றம்தான்  முடிவு செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments