Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவட்ட மைய நூலக உறுப்பினர்களாக இணைந்த மாணவர்கள்

Advertiesment
thiruvadi potry
, சனி, 23 ஏப்ரல் 2022 (23:44 IST)
பரணிபார்க் கல்விக் குழும மாணவர்கள் 1000 பேர் மாவட்ட மைய  நூலக உறுப்பினர்களாக இணைந்தனர்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற பயிற்சி வகுப்பினை பரணிபார்க் கல்வி குழுமம் மற்றும் பொது நூலகத்துறை கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தினர். மேலும்   பரணிபார்க் கல்விக் குழும மாணவர்கள் 1000 பேர் மாவட்ட மைய நூலக உறுப்பினர்களாக இணைந்தனர்
 
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு கதிர், பயிற்றுநர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார். பரணி பார்க் கல்வி குழுமத்தின் தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் மற்றும் வாசகர் வட்ட தலைவர் மாவட்ட மைய நூலகம் தீபம் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இந்நிகழ்ச்சியினை பரணி வித்யாலயா பள்ளி மாணவர் மன்ற மாணவ பிரதிநிதிகள் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் 1000 நூலக உறுப்பினர் அட்டைகளை சிறப்பு விருந்தினரிடமிருந்து மாணவ பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர் சுதாதேவி மற்றும் துணை முதல்வர் பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்