Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை அடித்து, உதைத்து கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் ...இதை ஸ்டாலின் தட்டிக்கேட்பாரா...?

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (19:20 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சாலை ஓரமாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்த பெண்களை திமுகவினர் அடித்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த  வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
திருமயம் பகுதியில் ஒரு கோயில் அருகே  கடந்த 30 ஆண்டுகளாக  பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் வாசுகி. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக  கடையில் , தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். 
 
இந்நிலையில் வாசகியின் கடைக்கு எதிரிலேயே திருமயம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணனின் அண்ணனான சிவராமன் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.ஆனால் நிறைய மக்கள் சிவராமன் கடைக்குச் செல்லாமல் வானதியின் கடையிலேயே பொருட்கள் வாங்கினர்.
 
இதனையடுத்து திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் சில நாட்களாக வாசுகியின் கடையைக் காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்துள்ளார். 
 
மேலும் ஒருகட்டத்தில், வாசுகியின் கடையில் இருந்த பொருட்களை எடுத்து தெருவில் வீசி, அவரையும் அவரது தங்கை கௌரி, அவர்களுடன் கடையில் இருந்த பெண்களையும் பலமாக தாக்கினர். தற்போது தாக்கிதலில்  காயமடைந்த பெண்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அண்மைக்காலமாக  கிராமசபா கூட்டங்களை நடத்தி வரும் ஸ்டாலின் இதைப் பற்றி கேட்பாரா...? தன் கட்சி நிர்வாகியை என்ன செய்வார் ..?என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments