Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் பட்டாசு தடைகள்; சிக்கலில் சிவகாசி ஆலைகள்! – பீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள்

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (09:26 IST)
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அடுத்தடுத்து பட்டாசு வெடிக்க தடை விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில் இருந்துதான் உற்பத்தியாகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு கொரோனா காரணமாக ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதனால் சிவகாசி பட்டாசு விற்பனை பெருமளவில் பாதிக்கப்படும் என்று நிலைமையை வலியுறுத்த்தி தடையை நீக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியிலும், தற்போது சண்டிகரிலும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட சிவகாசி பட்டாசு ஆலை ஊழியர்கள் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை பெரிய அளவில் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் தயாரித்த பட்டாசுகளை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments