Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூரில் நிறைவடைந்த மாநில அளவிலான சீனியர் பேட்மிட்டன் ..திறமையை காட்டிய மாணவர்கள்

கரூரில் நிறைவடைந்த மாநில அளவிலான சீனியர் பேட்மிட்டன் ..திறமையை காட்டிய மாணவர்கள்
, செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (21:15 IST)
கரூரில் நிறைவடைந்த மாநில அளவிலான சீனியர் பேட்மிட்டன் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கோவை சதீஸ்குமார், இரட்டையர் பிரிவில் கரூர் கணேஷ் நவீன் ஆகிய ஜோடியும், மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அக்‌ஷ்யா, இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ரம்யா,தனுஸ்ரீ ஆகியோரும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

கரூர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான சீனியர் இறகு பந்து போட்டிகள் கடந்த 04 தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தப் போட்டிகளில் தமிழத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 550 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவிகளில் போட்டிகள் நடைபெற்றன.

இறுதியாக நடைபெற்ற இறுதிபோட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவையைச் சேர்ந்த சதீஸ்குமார், திருப்பூரை சேர்ந்த சித்தார்த்யை 21-17, 14-21, 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் கரூரை சேர்ந்த கணேஷ் நவீன் ஜோடி 21-13, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் அர்ஜுன் கிருஷ்ணன,மணிகண்டன் ஜோடியை வென்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அக்‌ஷ்யா 22-20 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் மதுரையைச் சேர்ந்த சாருமதியை வென்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில், சென்னை சேர்ந்த ரம்யா ,தனுஸ்ரீ ஜோடி, 21-17, 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை அனுபிரபா,மதுரை ஜெர்லின் அனிகா ஜோடியை வென்றது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில், திருவள்ளுவர் சானியா,செந்தில்வேல் ஜோடி 21-18 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை பாலாஸ்ரீ,தீலிபன் ஜோடியை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம். ஜி ஆருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் - எம்.ஆர். விஜய் பாஸ்கர்