Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டமே சட்டத்தை திரும்ப பெற வைக்கும்; ஸ்டாலின் கடிதம்

Arun Prasath
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (09:36 IST)
போராட்டம் மூலமே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வைக்கமுடியும் என கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் பாஜக அரசை கண்டித்தும் வருகிற 23 ஆம் தேதி, மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் கட்சிகளுக்கும் சங்கங்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றிற்கு முரணான வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் வருகிற 23 ஆம் தேதி, சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி, ஜாதி, மதம் ஆகிய எல்லைகளை கடந்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இந்த சட்டத்தை திருமப பெற முடியும்” என முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments