Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் விவகாரத்தில் இப்படி நடக்கும் என எனக்கு தெரியும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (17:35 IST)
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது செல்லாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும் இன்று காலை பசுமைத்தீர்ப்பாயம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், 'ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம் என்றும், இப்படி நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு காட்டிய மெத்தனம் தான் காரணம் என்றும் இனியாவது, தமிழக அரசு முறையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுகவும், திமுகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக இணைந்து சட்டப்போராட்டம் நடத்த வேண்டும் என தூத்துகுடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

என் மனைவியை பார்த்து கொண்டே இருப்பது பிடிக்கும்.. 90 மணி நேரம் வேலை குறித்து ஆனந்த் மகேந்திரா..

அடுத்த கட்டுரையில்
Show comments