Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பு சகோதரி கனிமொழிக்கு: கமல் பட நடிகை எழுதிய கடிதம் வைரல்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:20 IST)
திமுக எம்பி கனிமொழி அவர்கள் சமீபத்தில் நெல்லையில் பேட்டி அளித்தபோது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருக்கும் வாக்களித்து மக்கள் தங்கள் வாழ்க்கையை வீணாக்கி கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார் 
 
கனிமொழியின் இந்த பதிலுக்கு நடிகை ஸ்ரீபிரியா தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் இது குறித்து எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
கமல்ஹாசன்‌ ரஜினிக்கு வாக்களித்து வாழ்க்கையை வீணாக்க மக்கள்‌ விரும்பவில்லை” என்று அன்பு சகோதரி கனிமொழி அவர்கள்‌ நெல்லையில்‌ பேட்டி அளித்ததாக தகவல்‌...
 
சகோதரி..! தாங்கள்‌ அரசியலில்‌ என்னை விட மூத்தவர்‌. இருப்பினும்‌ சில உண்மைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது... எம்‌ தலைவர்‌ நம்மவர்‌ மற்றும்‌ நண்பர்‌ ரஜினி அவர்களைப்பற்றிய விமர்சனம்‌ அவர்கள்‌ திரைத்துறையை சார்ந்தவர்கள்‌ எனில்‌, உங்கள்‌ தந்தையார்‌, என்‌ பெரும்‌ மரியாதைக்குரிய நம்‌ தலைவர்‌ ஐயா அவர்கள்‌, திரு.மாறன்‌, திரு .அமிர்தம்‌, 'திரு.உதயநிதி, திரு.ஸ்டாலின்‌, திரு.செல்வம்‌ மற்றும்‌ சன் பிக்சர்ஸ் (யார்‌ பெயராவது விடுபட்டு இருந்தால்‌ மன்னிக்கவும்‌) என அனைவரும்‌ திரைத்துறையில்‌ ஈடுபட்டவர்கள்‌ என்பதை உங்களுக்கு எடுத்து சொல்லும்‌ துரதிர்ஷ்டம்‌ எனக்கு! இல்லை அவர்கள்‌ வயதை குறித்து உங்கள்‌ கருத்து என்றால்‌ அதற்கு, மேல்‌ குறிப்பிட்டுள்ள பெயர்கள்‌ சாலப்பொருந்தும்‌!
 
மக்களுக்கு மாற்றம்‌ தேவை நல்ல ஆட்சியை கொண்டு வரவேண்டும்‌ என்று வருபவர்களை வரவேற்று போட்டியிடுங்கள்‌... மூத்த தலைவராக பல தலைமுறை அரசியலைக் கண்டு வென்ற உங்கள்‌ தந்தையார்‌ விரும்பி அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்‌ “நம்மவர்‌ '. அந்த அரசியல்‌ மேதையின்‌ கணிப்பை கெளரவப்படுத்துங்கள்‌ தங்கையாரே...
.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்மொழிக் கொள்கை பத்தி நீங்க பேசாதீங்க விஜய்! - தமிழிசை பதிலடி!

அடுத்த மாதம் +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்! மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா!?

கும்பமேளா முடியுறதுக்குள்ள ரயில்கள் காலி..? அடித்து உடைக்கும் பயணிகள்..! - ரயில்வேக்கு செலவு!

அடுத்த கட்டுரையில்
Show comments