Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை வளைத்த கடற்கொள்ளையர்கள்! – நாகையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:35 IST)
நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணத்தை சேர்ந்த 6 மீனவர்கள் படகில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர் கும்பல் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அவர்கள் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு மீனவர்களையும் கடலில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த கண்ணன் என்ற மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவது பெரும் சிக்கலாக இருந்து வந்த நிலையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களாலும் பிரச்சினை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments