Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து பெங்களூரு, விஜயவாடாவுக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (07:55 IST)
தமிழக மக்களின் நலனை கருதி அவ்வப்போது சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வரும் தென்னக ரயில்வே தற்போது சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் விஜயவாடா ஆகிய இரு நகரங்களுக்கும் இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது 
 
இதுகுறித்து தென்னக ரயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு சத்யசாய் பிரசாந்தி என்ற ரயில் நிலையத்திற்கு இம்மாதம் 11, 18, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் டிசம்பர் 11 முதல் அதாவது இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து விஜயவாடா ரயில்வே நிலையத்தில் நிலையம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
இந்த சிறப்பு ரயில்களை பெங்களூரு மற்றும் விஜயவாடா செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.. அமைச்சர் எவ வேலு

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments