Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை விடுமுறை கால சிறப்பு ரெயில்.. சென்னை-தூத்துக்குடி ரயிலின் முழு விவரங்கள்..!

Mahendran
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:10 IST)
ஆயுதபூஜை வருகிற 11-ந்தேதி வெள்ளியன்று கொண்டாடப்படும் நிலையில் வரும் சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
 
இதனையடுத்து சில சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பார்ப்போம்.
 
  கன்னியாகுமரி-சென்னை தாம்பரம் : இந்த ரயில் வருகிற 10 மற்றும் 12-ந்தேதிகளில் இரவு 9.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறமாகிறது, மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளில் மாலை 4.30 மணிக்கு சென்னைக்கு புறமாகிறது. மொத்தம் 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
 
சென்னை சென்ட்ரல் - நாகர்கோல்:  ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை வழியாக 17 பெட்டிகளுடன் ஒரு முறை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 9-ந்தேதி மாலை 7 மணிக்கு புறமாகிறது. மறுமார்க்கமாக 10-ந்தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.
 
 சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி:  மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில், சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் சென்னையில் இருந்து 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறமாகிறது. மறுமார்க்கமாக 9-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறமாகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments