Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்..! மக்களவை தேர்தலையொட்டி அறிவிப்பு..!!

Senthil Velan
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (15:03 IST)
மக்களவைத் தேர்தலையொட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனிடையே, வாக்குப்பதிவை ஒட்டி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து வசதிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. தற்போது வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
அதன்படி, 18 மற்றும் 20ம் தேதிகளில் சென்னை தாம்பரம் - கன்னியாகுமரிக்கும், சென்னையின் எழும்பூர் - கோவைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களிலும் தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது.

ALSO READ: அடிமை அதிமுகவை விரட்டியது போல எஜமானர்களான பாஜகவையும் விரட்ட வேண்டும்..! அமைச்சர் உதயநிதி ஆவேசம்..!!
 
அதேபோல், சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில் 18 மற்றும் 20ம் தேதி ஆகிய இரு தினங்களில் மாலை 4.25 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments