Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (08:59 IST)
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் நிறைவடந்ததையடுத்து பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின. 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை.
 
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான, பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுள்ளதால் எட்டு நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையம் வெறிச்சோடி இருந்ததால் சிறப்பு பஸ் இயக்கப்படாமல் போய்விடுமோ? என்று பயணிகள் கவலை அடைந்தனர்.
 
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. கடந்த சில நாட்களை காட்டிலும் நேற்று இரவு முதல் சற்று அதிகமாக அரசு பேருந்துகள்  வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத்துறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளன.  

சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய 5 சிறப்பு இடங்களில் இருந்து நேற்று வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயங்க தொடங்கின. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவதுபோலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments