Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு புள்ளி கூட மாறாமல் மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்: சபாநாயகர் அப்பாவு

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (10:51 IST)
ஒரு புள்ளி கூட மாறாமல் அனைத்து மசோதாக்கள் ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்று சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டி இருந்தது. இந்நிலையில்  ஆளுநர் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார்

இதனையடுத்து இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூடிய நிலையில் அந்த 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று  செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இன்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு ’ஒரு புள்ளி கூட மாறாமல் இந்த சட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசிய போது ’ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றும்  இருந்தாலும் அது இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதை மரபாகும்’ என்றும் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments