Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி வழியாக தாம்பரம் சிறப்பு ரயில்? – எந்தெந்த நாட்களில் செயல்படும்?

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:01 IST)
திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சில காலமாக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை அடுத்த ஜனவரி மாதம் வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முகமது ஷமி திடீர் நீக்கம்: அதிர்ச்சி காரணம்

அதன்படி இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் (06004) இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20க்கு தாம்பரம் சென்றடையும். அதுபோல மறுமார்க்கத்தில் தாம்பரம் – நெல்லைக்கு திங்கட் கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40க்கு திருநெல்வேலி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, அம்பை, சேரன்மாதேவி ரயில் நிறுத்தங்கள் வழியாக நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments