Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தியேட்டரில் அந்த இடத்தில் ஒருவன் கை வைத்தான் - நடிகை ஓபன் டாக்

Advertiesment
தியேட்டரில் அந்த இடத்தில் ஒருவன் கை வைத்தான் - நடிகை ஓபன் டாக்
, புதன், 15 மார்ச் 2017 (08:53 IST)
நடிகை சோனம் கபூர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.


 

 
சமீப காலமாகவே சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். அதற்கடுத்து,  இன்னும் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தற்போது பேசியுள்ளார். 
 
எனக்கு 14 வயது இருக்கும். எனது தோழிகளோடு அக்‌ஷய்குமார் மற்றும் ரவீனா நடித்த ஒரு திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றிருந்தேன். இடைவேளையின் போது சமோஷா வாங்க நாங்கள் வெளியே சென்றோம். திரும்பி வரும் போது பின்னால் இருந்து ஒருவன் என் மார்பை பிடித்தான். நான் உடனே பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போனேன். என்ன நடந்ததென்றே தெரியாமல் நடுங்கிப் போனேன். எனக்கு உடனே அழுகை வந்துவிட்டது. அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்று அமர்ந்தேன். அழுது கொண்டே படம் பார்த்தேன். நான் ஏதோ தவறு செய்து விட்டது போல் உணர்ந்தேன். ஆனால், அதுபற்றி யாருக்கும் நான் தெரிவிக்கவில்லை. 
 
இதுபோன்ற பாலியல் கொடுமைகளை பல பெண்களும் சந்தித்திருப்பார்கள் என எனக்கு தெரியும்”  என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம்: ஓபிஎஸ், தீபா அதிர்ச்சியா?