Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூலிப்படை ஆக்கப்பட்டாரா ராம்குமார்? : வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்

Advertiesment
கூலிப்படை ஆக்கப்பட்டாரா ராம்குமார்? : வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்
, வியாழன், 14 ஜூலை 2016 (12:35 IST)
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை, யாரோ ஒரு மர்ம நபர் கூலிப்படை போல் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


 

 
ராம்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்தான் குற்றவாளி என்று போலீஸ் தரப்பும், அவர் பலிகாடாக்கப்பட்டார் என, ராம்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள வழக்கறிஞர் ராமராஜும் கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில், ராமராஜ் குழுவில் உள்ள ஒரு வழக்கறிஞர் சமீபத்தில் சிறையில் உள்ள ராம்குமாரை சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது: 
 
“நான் ராம்குமாரிடம் பேசினேன். எந்த கேள்விக்கும் அவரால் சரியாக பதில் கூற முடியவில்லை. முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். எதற்காக சென்னை வந்தாய் என்று கேட்டால் அரியர் எக்ஸாம் எழுத வந்தேன் என்கிறார். சொந்த ஊரில் இருந்து கொண்டே எழுதலாமே என்று கேட்டால், அரசு தேர்வு எழுத வந்தேன் என்கிறார். 
 
சென்னைக்கு யார் அழைத்து வந்தார் என்று கேட்டால், பதில் இல்லை. காவல்துறை கைது செய்தபோது, நானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டேன் என்கிறார். பின்னர் காவல்துறையுடன் வந்தவர்கள் அறுத்தார்கள் என்கிறார். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சுவாதியோடு எந்தத் தொடர்பும் இல்லை என்றார். சுவாதியைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் தலையைக் கீழே குனிந்து கொள்கிறார் ராம்குமார்.
 
எனவே, சுவாதி கொலையில் ராம்குமார் ஒரு கருவியாக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது” என்று அவர் கூறினார். 
 
ராம்குமாரின் செயல்பாடுகள் அவரது வழக்கறிஞருக்கே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராம்குமார் சென்னை வந்ததே சுவாதியை கொலை செய்யும் நோக்கத்திற்காகவே. அவருக்கும் சுவாதிக்கும் இடையே எந்தவித பகையோ காதல் விவகாரமோ இருக்கவில்லை. சுவாதிக்க இருந்த ஒரே பகை அவரை விடாமல் சுற்றிய பெங்களூரு விவகாரமே என கூறுகின்றனர். எனவே பெங்களூரு மனிதர் ராம்குமாரை ஏவி விட்டு சுவாதியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகங்கள் கிளம்புகின்றன. 
 
ராம்குமாரும் வழக்கறிஞர்களிடம் உண்மையை சொல்லாமல் எதையோ மறைக்கிறார். காவல்துறையும் இந்த வழக்கில் சுவாதி பற்றிய சில உண்மைகள் வெளியே வரக்கூடாது என்பதற்காக ராம்குமாரோடு இந்த வழக்கை முடித்துக்கொள்ள அவசரம் காட்டுகிறது எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் போது சுவாதி கொலைக்கான உண்மையான காரணம், யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது. மற்றும் இதில் புரியாத புதிராக உள்ள பெங்களூரு விவகாரம் வெளியே வரும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குவைத்தில் 5 ஆயிரம் தமிழர்கள் போராட்டம்