Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வின் பெண் குழந்தைக்கு சோபன்பாபுவே தந்தை - உறவினர் லலிதா பரபரப்பு பேட்டி

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (14:46 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான், அதற்கு நடிகர் சோபன்பாபு தந்தை என ஜெ.வின் உறவினர் லலிதா கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், ஜெ.வின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு வலியுறுத்தி, அவரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. 
 
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.  அந்நிலையில்தான், பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகள் லலிதா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: 
 
எனது தாயின் அண்ணன் மகள்தான் ஜெயலலிதா. அதாவது எனக்கு தாய் மாமா மகள். ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்தது எங்களுக்கு தெரியும். அதன் விளைவாக அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் உண்மை. எங்கள் பெரியம்மா ஜெயலட்சுமிதா அவருக்கு பிரசவம் பார்த்தார்.  இதுபற்றி வெளியே கூறக்கூடாது என ஜெயலலிதா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். 1970ம் ஆண்டுக்கு பின் ஜெ. எங்கள் குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. 


 

 
அதேபோல், ஜெ.வின் சகோதரி முறையான சைலஜா-சாரதி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். அதுதான் அம்ருதா. ஜெ.வின் மகள் நான்தான்  என தற்போது அம்ருதா கூறியிருக்கிறார். அம்ருதா கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. டி.என்.ஏ சோதனை பார்த்தால் உண்மை தெரியவரும். சொத்துக்கு ஆசைப்பட்டு அம்ருதா இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. ஜெயலலிதாவே தன் தாய் என அம்ருதா நினைக்கிறார். ஆனால், எங்களிடம் எந்த ஆதரமும் இல்லை” என லலிதா கூறியிருந்தார்.
 
இவரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் மீண்டும் அளித்த பேட்டி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
 
அதில், ஜெயலலிதாவும், சோமன்பாபுவும் சென்னை மயிலாப்பூரில் ஒரு வீட்டில் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். அதில்தான், அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனவே, சோபன்பாபுவே அம்ருதாவின் தந்தையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. டி.என்.ஏ சோதனை நடத்தினால் உண்மை தெரிய வரும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

100வது பிறந்த நாளை கொண்டாடு நல்லகண்ணு.. கமல்ஹாசன் வாழ்த்து

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. எஃப்.ஐ.ஆரில் உள்ள அதிர்ச்சி தகவல்..!

20 ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடு! சுனாமி நினைவு தினம்! - கடற்கரையில் அஞ்சலி!

டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வரவிருந்த அமித்ஷா திட்டம் ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments