கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி.
இவர் தனது சிறுவயதில் இருந்து குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறார்..
இந்நிலையில் கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர்கள், உமா மகேஸ்வரி, மற்றும் சஞ்சய் ஆகியோர் சுமார் 8 அடி நீளம் உள்ள சார பாம்பை லாபமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
மனிதனிடமிருந்து பாம்பையும்,பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் எனவும், இந்த பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம் எனவும் பாம்புகள் இருந்தால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.
பெண் பாம்பு பிடி வீராங்கனை.