Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பு சுந்தரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பிரச்சாரம்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (11:02 IST)
ஆயிரம்விளக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி வாக்கு சேகரித்தார். 

 
ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதி புஷ்பா நகரில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக ஏனைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த  ஏராளமான ஆண்கள் பெண்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
 
 முன்னதாக வாக்காளர்களை கவரும் விதமாக மேடையில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உடன் வந்த வேட்பாளர் குஷ்பூ சுந்தர் பிரச்சார வேனில் ஏறி வாக்காளர்களுக்கு கையசைத்து வாக்காளர்களை உற்சாகப்படுத்தினார். பின்பு பேசிய குஷ்பு சுந்தர் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கொண்டுவந்து செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மிக விரிவாக வாக்காளர்கள் இடையே எடுத்துரைத்தார்.
 
அதோடு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நல்ல பல திட்டங்களையும் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி மத்தியில் ஆளுகின்ற ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக வாக்காளர்கள் மத்தியில் பேசி வேட்பாளர் குஷ்பு சுந்தருக்கு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments