Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை....

J.Durai
திங்கள், 6 மே 2024 (18:33 IST)
கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ.ஆறு வயதான சிறுமி ஷன்வித்தா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது ஆர்வம் கொண்ட சிறுமி,ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணிணியில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின்   ஆர்வத்தை கண்ட பெற்றோர் தனியாக பயிற்சி அளித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சிறுமி தமிழ் எழுத்துக்களான பனிரெண்டு உயிர் எழுத்துக்கள் ,18 முதன்மை உயிர்  மெய் எழுத்துக்கள்,18 மெய்யெழுத்துகள்,ஆயுத எழுத்து மற்றும் ஓம் எனும் ஆன்மீக எழுத்து என ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் டைப் செய்து இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.குறிப்பாக ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணிணியில் ஆறு வயதான சிறுமி செய்த இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் தொல் காப்பிய தமிழ் சங்கமம் ,உட்பட பல்வேறு அமைப்பினர் இணைந்து சிறுமி ஷன்வித்தாவிற்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தனர்.
 
பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர்  தமிழ் எழுத்துக்களில் சிறுமி செய்த  சாதனையை  பாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை!

மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகளின் ரியாக்சன் என்ன?

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments