Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருந்ததியரை இழிவுபடுத்திய சீமானின் - உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஆறு பேர் கைது!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (13:05 IST)
அருந்ததிய மக்களை இழிவுபடுத்தும்  சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட தமிழர் கட்சியினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது அருந்ததிய மக்களை வந்தேறிகள் என பேசினார். இதனையடுத்து அருந்ததிய அமைப்புகள் சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   
 
சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீதும் கற்கள் வீசப்பட்டது. தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாதிய ரீதியாகவும், மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்கும் விதமாகவும், அருந்ததிய மக்களை இழிவுபடுத்தி இட ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தி சீமான் பேசுவதை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோசங்களை எழுப்பினர்.  
 
ஆர்ப்பாட்டத்தின் போது சீமானின்  உருவபொம்மையை எரிந்தனர். காவல் துறையினர் உருவபொம்மை பாதி எரிந்த நிலையில் கைப்பற்றி , தண்ணீர் கொண்டு அனைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments