Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுக்கி புகழ் சுப்பிரமணியன் சுவாமி அடுத்து தமிழர்களுக்கு வைக்க இருக்கும் பெயர் ஐஎஸ் தீவிரவாதி!

பொறுக்கி புகழ் சுப்பிரமணியன் சுவாமி அடுத்து தமிழர்களுக்கு வைக்க இருக்கும் பெயர் ஐஎஸ் தீவிரவாதி!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (11:14 IST)
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து தமிழர்களை சீண்டிக்கொண்டே இருக்கிறார். தமிழக பாஜகவும் மத்திய பாஜகவும் மௌனமாக இருந்து அவரது பேச்சை ரசித்துக்கொண்டு இருக்கின்றனர்.


 
 
மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் சுவாமி பேசுவதை போல் பேசினால் பாஜகவினர் அமைதியாக இருப்பார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. சுவாமியின் தமிழர் விரோதபோக்கை எதிர்த்து கருத்து சொல்லவோ, அவரது வரம்பு மீறிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவோ தமிழக பாஜகவுக்கு தைரியம் இல்லை.
 
ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என பேச ஆரம்பித்த சுப்பிரமணியன் சுவாமி தற்போது சர்வசாதாரணமாக தமிழ் பொறுக்கிகள் என பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழர்களுக்கு பொறுக்கி என்ற பெயரையே வைத்துவிட்டார்.
 
இந்நிலையில் தற்போது அவர் குறிப்பிடும் தமிழ் பொறுக்கிகள் மீது ஐஎஸ் தீவிரவாதி என்ற முத்திரையை குத்த தயாரகிவிட்டார். இன்று அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை பகுதி வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பின் ஏஜெண்ட் 6 பேர் சென்னைக்குள் நுழைந்துள்ளனர். தமிழக பொறுக்கிகள் தான் அவர்களது இலக்கு என கூறியுள்ளார்.

 
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து தமிழக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் தமிழக இளைஞர்களை இவர் ஐஎஸ் தீவரவாதிகள் என்று அழைப்பதற்கான முன்னோட்டம் தான் இந்த டுவிட்டர் பதிவு என கூறப்படுகிறது. பாஜக தலைமை உடனடியாக தலையிட்டு சுப்பிரமணியன் சுவாமியை கண்டிக்க வேண்டும் என்பதே பலரதும் கருத்தாக உள்ளது. ஆனால் அது நடக்குமா?.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments