Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொள்வதாக ஆடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர் மீது திடீர் நடவடிக்கை

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (22:32 IST)
சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆறு காவல்துறை ஆய்வாளர்களை திடீரென மாற்றி காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் ராஜீவ் என்ற ஆய்வாளரும் ஒருவர். இவர்  தலைமைச்செயலக காலனி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்த காவல்துறை ஆய்வாளர் ராஜீவை செக்ரெட்ரியேட் காலனி காவல் நிலையத்திலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இவருடன் மேலும் 5 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சிவசுப்பு என்பவர் வில்லிவாக்கம் பகுதிக்கும், ஸ்ரீனிவாசன் என்ற ஆய்வாளர் திருவல்லிக்கேணி பகுதிக்கும், இளவரசு என்ற ஆய்வாளர் மெரீனா பகுதிக்கும், நித்யகுமாரி என்ற ஆய்வாளர் ராயபுரம் பகுதிக்கும் செல்லமுத்து என்பவர் செகரட்டரி காலனி பகுதிக்கும் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சற்றுமுன்னர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

அடுத்த கட்டுரையில்
Show comments