Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி கணேசன் உயிலில் இருப்பது உண்மை… பிரபு தரப்பினர் வாதம்!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (11:08 IST)
உயில் ஜோடிக்கப்பட்டது என்ற மனுதரார்கள் குற்றச்சாட்டு தவறானது என ராம்குமார், பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சிவாஜி கணேசனின் இரண்டு மகள்களான சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தங்கள் தந்தை சிவாஜி கணேசன் எந்தவித உயிலும் எழுதி வைக்கவில்லை என்றும் ஆனால் போலியான உயில்கள் மூலம் சில சொத்துக்களை ராம்குமார், பிரபு ஆகிய இருவரும் விற்று விட்டனர் என்றும் வழக்கில் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு தாய் வழி வந்த சொத்திலும் பங்கு தரவில்லை என்றும் ஆயிரம் சவரன் நகைகள் இருப்பதாகவும், அதிலும் பங்கு தரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ராம்குமார், பிரபு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் வாதிட்டபோது, மனுதாரர்கள் தொடர்ந்து உயிலின் நம்பகத்தன்மை குறித்தும், அது பொய்யானது என்றும் கூறி வருகின்றனர் என்றும், உயில் ஜோடிக்கப்பட்டது என்ற மனுதரார்கள் குற்றச்சாட்டு தவறானது எனவும் வாதிட்டார்.

தொடர்ந்து வாதங்கள் முடிவடையாததால், ராம்குமார் மற்றும் பிரபு தரப்பு வாந்தங்களுக்காக வழக்கின் விசாரணை ஜூலை 21 தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments