Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் திலகத்திற்கு ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகத்திற்கு ஸ்டாலின் மரியாதை
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:22 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 
 
கடந்த 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் உள்பட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
கடந்த 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புச் சக்கரவர்த்தி, நடிகர் திலகம் உள்பட பல பட்டங்களை ரசிகர்கள் மூலம் பெற்றவர் சிவாஜி கணேசன். 
 
இதனிடையே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அடையாறு மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடும் மின் தட்டுப்பாடால் தத்தளிக்கும் சீனா - காரணம் என்ன?